Monday, January 10, 2011

அமைதிப்புரட்சி மாநாடு !

நாங்கள் ஆட்சிக்கு
வந்தால் ..............???
வன்முறையை வேரோடு
சாய்திடுவோம்
 அராஜகத்தை அறவே
 ஒழித்துடுவோம்!

தீவிரவாதத்தை  கருவிலேயே
சிதைத்திடுவோம்!
எதிர்க் கட்சி சதிகளை
எளிதில் முறியடிப்போம்!............ இறுதியில் நடந்த கலவரத்தில் .......
நிறைமாத கர்ப்பமாய் 
நிரம்பிவழிந்தன 
சிறைச்சாலைகள்!

குடை

எங்கேனும் நிழல் கிடைக்குமா?
கண்கள்  விரிய தேடுகின்றன!
வெயிலுக்கு விரிந்த குடை!

கௌரவம்

தூங்கித் தூங்கியே
பொழுதைக் கழிக்கிறான்!
அக்கம் பக்கத்தில்
நல்ல மதிப்பு -அரசாங்க உத்தியோகம்!