பூனைக் கண்கள்
குரங்கு புத்தி
சிம்மக் குரல்
யானை பலம்
புலியின் வன்மம்
பாம்பின் விஷம்
நரியின் தந்திரம்
எருமை வேகம்
மனிதனை மட்டும்
காணவில்லை !
மனிதனுக்குள்!
Tuesday, August 31, 2010
பச்சைத்தமிழர்கள்
இரண்டு தமிழர்கள்
சந்தித்துக் கொண்டார்கள் !
ஹலோ!
ஹௌ ஆர் யு ?
பைன் !
தேங்க்யு !
சந்தித்துக் கொண்டார்கள் !
ஹலோ!
ஹௌ ஆர் யு ?
பைன் !
தேங்க்யு !
Sunday, August 29, 2010
கவலை
எவ்வளவு கற்றுக்கொடுத்து என்ன பயன்?
பட்டம் தர மட்டும் மறுக்கிறார்கள் !
கவலை பட்டது கரும்பலகை!
பட்டம் தர மட்டும் மறுக்கிறார்கள் !
கவலை பட்டது கரும்பலகை!
சிகிச்சை
வாஸ்து நிபுணருக்கு
இதயத்தின் ஈசானி மூலையில்
சிறு ஓட்டை!
அறுவைசிகிச்சையின் போது
தனக்கேற்ற ராசிக் கல்லால்
அடைத்து விடச் சொன்னார் !!!
இதயத்தின் ஈசானி மூலையில்
சிறு ஓட்டை!
அறுவைசிகிச்சையின் போது
தனக்கேற்ற ராசிக் கல்லால்
அடைத்து விடச் சொன்னார் !!!
லொள்ளு
மெழுகுவர்த்தியை
மெழுகால் செய்யலாம் !
சக்கரவர்த்தியை
சக்கரையால் செய்ய முடியுமா?-இப்படிக்கு
சும்மா உட்கார்ந்து யோசிப்போர் சங்கம் .
மெழுகால் செய்யலாம் !
சக்கரவர்த்தியை
சக்கரையால் செய்ய முடியுமா?-இப்படிக்கு
சும்மா உட்கார்ந்து யோசிப்போர் சங்கம் .
Saturday, August 28, 2010
மழை
"மழை வேண்டி யாகம் "
நடந்துகொண்டிருந்தது !
யாகம் முடிந்து வீடு
திரும்பும் வரை
மழை வராமல் இருக்கவேண்டுமே!
பக்குவமாய் பிரார்த்தனை
செய்தன பக்தர்கள் மனது.
" வாய்விட்டுச் சிரித்தார் "_வருண பகவான்!
நடந்துகொண்டிருந்தது !
யாகம் முடிந்து வீடு
திரும்பும் வரை
மழை வராமல் இருக்கவேண்டுமே!
பக்குவமாய் பிரார்த்தனை
செய்தன பக்தர்கள் மனது.
" வாய்விட்டுச் சிரித்தார் "_வருண பகவான்!
Thursday, August 26, 2010
சொல்லாதது
சைவ மடத்தின்
தலைவருக்கு
நிகழ்ந்தது -மரணம்
சிவகோஷத்துடன்
இறுதி ஊர்வலம்
சென்றுகொண்டிருண்டது.
நடப்பவர்கள் சிவ சிவ சொல்ல
படுத்திருப்பவர் மௌனமாய் வருவதேன்?
என்று கேள்வி கேட்டது
இடை மறித்த பைத்தியம் ஒன்று.
அவர் மரித்துவிட்டதாக
சுற்றி நின்றவர்கள் கூறினர்,
சடங்குகளை முடித்து
மடம்திரும்பியவர்களின்
கண்களில் பளிச்செனப் பட்டது
கரியால்கிறுக்கப்பட்ட
சுவற்றின் வாசகம்
"சிவம் என்று சொல்லாதது சவம் ".
தலைவருக்கு
நிகழ்ந்தது -மரணம்
சிவகோஷத்துடன்
இறுதி ஊர்வலம்
சென்றுகொண்டிருண்டது.
நடப்பவர்கள் சிவ சிவ சொல்ல
படுத்திருப்பவர் மௌனமாய் வருவதேன்?
என்று கேள்வி கேட்டது
இடை மறித்த பைத்தியம் ஒன்று.
அவர் மரித்துவிட்டதாக
சுற்றி நின்றவர்கள் கூறினர்,
சடங்குகளை முடித்து
மடம்திரும்பியவர்களின்
கண்களில் பளிச்செனப் பட்டது
கரியால்கிறுக்கப்பட்ட
சுவற்றின் வாசகம்
"சிவம் என்று சொல்லாதது சவம் ".
விதி
பெண்களுக்கு,
அழகும் அறிவும்
அன்பும் பண்பும்
திருமனத்திற்கு தகுதியாம்,
ஆண்களுக்கு ,
அறிவின் முதிர்ச்சியும்
நிர்வாகத்திறனும்
உத்தியோகத்திற்கு தகுதியாம் ,
ஆனால் -ஈழத்தமிழர்களுக்கு ,
சுவாசித்தல் மட்டுமே
உயிர் வாழ தகுதி
என்றானது
எந்த கடவுளின் கட்டளை?
அழகும் அறிவும்
அன்பும் பண்பும்
திருமனத்திற்கு தகுதியாம்,
ஆண்களுக்கு ,
அறிவின் முதிர்ச்சியும்
நிர்வாகத்திறனும்
உத்தியோகத்திற்கு தகுதியாம் ,
ஆனால் -ஈழத்தமிழர்களுக்கு ,
சுவாசித்தல் மட்டுமே
உயிர் வாழ தகுதி
என்றானது
எந்த கடவுளின் கட்டளை?
பகுத்தறிவு
ஆன்மீகத்திற்கும் நாத்திகத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? இரண்டிற்கும் உள்ள இடைவெளி மிக தூரமா? இல்லை இரண்டும் இரண்டிலும் இருந்தும் இல்லாமல் இருக்கிறதா?
கேள்வி கேட்பதுதான் நாத்திகத்தின் அடிப்படை என்பது பெரியார் சிந்தனை.
நான் யார்? என்ற கேள்விதான் ஆன்மீகத்தின் இறுதித்தேர்வு. இதில் தேர்ந்தவர்கள் மட்டுமே உலகை வென்றவர்கள்.
உருவவழிபாடு -மூடநம்பிக்கை எனில்,பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிப்பது எதோடு சேர்ந்தது?
பகுத்தறிவே நாத்திகம் என்றால்,தன்னை உணர்தலே உண்மையான ஆன்மிகம் என்ற ஞானிகளின் கருத்து ஆத்திகமா? நாத்திகமா?
கேள்வி கேட்பதுதான் நாத்திகத்தின் அடிப்படை என்பது பெரியார் சிந்தனை.
நான் யார்? என்ற கேள்விதான் ஆன்மீகத்தின் இறுதித்தேர்வு. இதில் தேர்ந்தவர்கள் மட்டுமே உலகை வென்றவர்கள்.
உருவவழிபாடு -மூடநம்பிக்கை எனில்,பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிப்பது எதோடு சேர்ந்தது?
பகுத்தறிவே நாத்திகம் என்றால்,தன்னை உணர்தலே உண்மையான ஆன்மிகம் என்ற ஞானிகளின் கருத்து ஆத்திகமா? நாத்திகமா?
Wednesday, August 25, 2010
தாய் மனம்
குழந்தை வளர்ப்பு
கருத்தரங்கில்
மனம் ஒட்டவேயில்லை!
தன் பிள்ளை
குழந்தைகள் காப்பகத்தில்!
கருத்தரங்கில்
மனம் ஒட்டவேயில்லை!
தன் பிள்ளை
குழந்தைகள் காப்பகத்தில்!
Subscribe to:
Posts (Atom)