சைவ மடத்தின்
தலைவருக்கு
நிகழ்ந்தது -மரணம்
சிவகோஷத்துடன்
இறுதி ஊர்வலம்
சென்றுகொண்டிருண்டது.
நடப்பவர்கள் சிவ சிவ சொல்ல
படுத்திருப்பவர் மௌனமாய் வருவதேன்?
என்று கேள்வி கேட்டது
இடை மறித்த பைத்தியம் ஒன்று.
அவர் மரித்துவிட்டதாக
சுற்றி நின்றவர்கள் கூறினர்,
சடங்குகளை முடித்து
மடம்திரும்பியவர்களின்
கண்களில் பளிச்செனப் பட்டது
கரியால்கிறுக்கப்பட்ட
சுவற்றின் வாசகம்
"சிவம் என்று சொல்லாதது சவம் ".
hai..... congrats.. keep doing. first put a heading on each kavithai. and add it to tamilmanam.
ReplyDeletethanks lallu keep watching my blog
ReplyDelete